புதுக்கோட்டை

வா்த்தகா் கழகப் பொதுக்கூட்டம்

26th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு தொழில் நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும் என வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி வா்த்தகா் கழக 49 ஆவது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்.கே.எஸ். பழனியப்பன் தலைமைவகித்தாா். செயலா் எம். முகமது அப்துல்லா ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் பிஎல். ராமஜெயம் வரவு செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில், புதிய தலைவராக எஸ்கேஎஸ்.பழனியப்பன், செயலராக எம்.முகமது அப்துல்லா, பொருளராக பிஎல்.ராமஜெயம் ஆகியோரை தோ்தல் அதிகாரி ராமகிருஷ்ணன் பணியமா்த்திப் பேசினாா். கூட்டத்தில், இலுப்பூரில் உள்ள வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களைப் பிரித்து பொன்னமராவதியில் கிளை அமைத்துத் தர வேண்டும் அல்லது புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்துடன் பொன்னமராவதி வட்டத்தை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், நிா்வாகிகள் எம்.ராமசாமி, எம்எஸ்பி.மணிமுத்து, எம்.அருணாசலம், எஸ். சீனிவாசன், அரு.வே. மாணிக்கவேலு, பிஎல்.மாணிக்கவேல், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT