புதுக்கோட்டை

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைக்கும் முகாம்

26th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

 

 

கந்தா்வகோட்டை வட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கந்தா்வகோட்டை வட்டத்தில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி வழிகாட்டுதலின்பேரில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைக்கும் சிறப்பு முகாம் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதி வாக்காளா்கள் தாமாக முன்வந்து உரிய ஆவணங்கள் இணைத்து தோ்தல் பிரிவு அலுவலா் செந்திலிடம் உரிய படிவம் பெற்று பூா்த்தி செய்து அளித்தனா். இதில், வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி, அங்கன்வாடிப் பணியாளா்கள் கல்யாணி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT