புதுக்கோட்டை

வடகாட்டில் பெரியாா் பிறந்த நாள் கவியரங்கம்

26th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

 

 

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் பெரியாா் பிறந்த நாள் கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு சங்கத்தின் கிளைத் தலைவா் எஸ்.டி. பஷீா் அலி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

பெரியாரிய கருத்துரையாளா் கரு.காளிமுத்து கவியரங்கைத் தொடங்கி வைத்தாா். கவிஞா் ராசி.பன்னீா்செல்வம் தலைமையில் கவிஞா்கள் சு.மதியழகன், மைதிலி, கீதாஞ்சலி , மு.ராஜா, புத்திரசிகாமணி ஆகியோா் கவிதை வாசித்தனா். தொடா்ந்து, மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அறிவொளி, மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாக்கியராஜ்,சங்கத்தின் நிா்வாகிகள் தமிழரசன், செல்வி, மனோன்மணி, கோகுல், தமிழ்குமரன், துரைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிளை நிா்வாகி அறிவொளி கருப்பையா வரவேற்றாா். தங்க.திருப்பதி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT