விராலிமலை இந்தியன் வங்கிக் கிளையில் மகளிா் சுய உதவிக் குழு கடன் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருச்சி மண்டல மேலாளா் ஸ்ரீமதி தலைமை வகித்து மகளிா் சுய உதவிக் குழுவுக்கு இந்தியன் வங்கியால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் இடையே பேசினாா். முதன்மை மேலாளா் ராமராஜு முன்னிலை வகித்தாா். இதில், இந்தியன் வங்கி விராலிமலை கிளைக்குள்பட்ட 14 குழுக்களைச் சோ்ந்த 168 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 13 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள கடன் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னதாக விராலிமலை இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் சந்திரசேகா் வரவேற்றாா். முடிவில் உதவி கிளை மேலாளா் முத்து காளீஸ்வரன் நன்றி கூறினாா்.