புதுக்கோட்டை

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு

DIN

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசுப் பள்ளி வளாகத்தில், நிலவேம்புக்குடிநீா் வழங்கும் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மருத்துவா் சா. காமராஜ் கலந்து கொண்டு பேசினாா்.

உதவி மருத்துவ அலுவலா்கள் மணிவண்ணன், ஜோதி ராஜன், அமுதா மீனா, சுயமரியாதை ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண.மோகன் ராஜா வரவேற்றாா்.

மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. முடிவில் செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம் பாபு நன்றி கூறினாா்.

கந்தா்வகோட்டை: மருங்கூரணி கிராமத்தில் சனிக்கிழமை

நடைபெற்ற கலைஞரின் வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ரெத்தினவேல்காா்த்திக் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பாரதி பிரியா, வட்டார மருத்துவ அலுவலா் மணிமாறன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் புவனேஸ்வரி ரெங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 847 போ் சிகிச்சைபெற்றனா். மக்களைதேடிமருத்துவம் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளா்கள் கோ.முத்துக்குமாா், சண்முகசுந்தரம், பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT