புதுக்கோட்டை

குடிநீா், பேருந்து சேவை கோரி மறியல்

25th Sep 2022 01:23 AM

ADVERTISEMENT

 

ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி, பாப்பான்விடுதி ஊராட்சியில் மின் மோட்டாா் பழுது காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் பாப்பான்விடுதி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி தலைமையிலான போலீஸாா், திருவரங்குளம் ஒன்றிய அலுவலா்கள், வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இருதினங்களுக்குள் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

பேருந்து சேவை கோரி மாணவிகள் மறியல்:

கந்தா்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி வழித்தடத்தில் சரிவர நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனக் கூறி, பள்ளி மாணவிகள் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல்துறையினா் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் வீரடிப்பட்டி, தச்சங்குறிச்சி, மீனம்பட்டி வழித்தடங்களில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை. பணிமனை கிளை மேலாளரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT