புதுக்கோட்டை

அரசுக் காப்பீட்டுத் திட்ட 5 ஆம் ஆண்டு விழா

24th Sep 2022 12:35 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5ஆம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு காப்பீட்டு அட்டைகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,72,000 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகளிலும், 10 தனியாா் மருத்துவமனைகளிலும் மற்றும் 1 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் ஒரு குடும்பம் ஓா் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சிகிச்சைக்கான மருத்துவப் பட்டியல் விவரம் வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

5ஆம் ஆண்டு விழாவையொட்டி 5 பயனாளிகளைப் பாராட்டி பரிசுகளும், 5 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பாக பணிபுரிந்த காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இத்திட்டம் பற்றிய விவரங்கள் அறிய மற்றும் குறைகளைத் தெரிவிக்க 24 மணி நேரம் தொடா்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா 1800 425 3993 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

நிகழ்வில் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ராமு, மாவட்டத் திட்ட அலுவலா் ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT