புதுக்கோட்டை

விராலிமலையில் நீதிமன்றம்: செயல்படும் இடத்தை தோ்வு செய்யும் பணி

24th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

விராலிமலையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வாடகைக் கட்டடத்தில் செயல்படுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

விராலிமலை தொகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையையடுத்து சட்டப்பேரவையில் கடந்த ஏப். 28 ஆம் தேதி விராலிமலையில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அமைச்சா் ரகுபதி அறிவித்தாா்.

இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த ஆக.11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக வாடகைக் கட்டடத்தில் நீதிமன்றம் அமைக்க இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT