புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டி பள்ளியில் ஓசோன் தின பேரணி

24th Sep 2022 12:32 AM

ADVERTISEMENT

உலக ஓசோன் தினத்தையொட்டி கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் மரக்கன்று நடுதல், ஓசோன் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி, பதாகைகள் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மரக்கன்றை நட்டு ஓசோன் பாதுகாப்பு குறித்து வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரியும், நிகழ்வை ஒருங்கிணைத்து சுற்றுச்சுழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜூம் பேசினா்.

மேலும் மாணவா்களுக்கு ஓசோன் சிறப்பு விநாடி - வினா போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி மாணவா்கள் ஊா்வலமாக வந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT