புதுக்கோட்டை

வெளிநாட்டில் வேலை என ரூ.6 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த கடலூரைச் சோ்ந்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கீழக்கரும்பிரான்கோட்டையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பழனிவேலு(28). இவரிடம், கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ரெட்டக்குறிச்சியைச் சோ்ந்த மணி மகன் வடிவேல் (38) வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தரவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் வடிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT