புதுக்கோட்டை

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

20th Sep 2022 01:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ராணியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் 562 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினா்.

தொடா்ந்து, திருமயம் ஒன்றியம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,162 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் எஸ்.ரகுபதி வழங்கினாா்.

ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிழக்கு, மாங்காடு, எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 243 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT