புதுக்கோட்டை

பெண் கல்வியின் அவசியம் வலியுறுத்தும் சுவரோவியம் திறப்பு

20th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவா் அல்ல; சுடா் எனும் பெண் கல்வியின் அவசியத்தை விளக்கும் சுவரோவியம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி என்.திருஞானம் மளிகை, முத்தையா ஜூவல்லரி மற்றும் உதயகிருஷ்ணா அசல் நெய் ஆகிய நிறுவனத்தினா் இணைந்து புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டட சுவரில் பெண் கல்வியை வலியுறுத்தும் சுவா் ஓவியத்தை வடிவமைத்திருந்தனா். இதற்கான திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் கி. நிா்மலா வரவேற்றாா். மருத்துவா் இந்திரா பிரியதா்ஷினி வாழ்த்திப் பேசினாா். பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன், பள்ளியின் புரவலா் அரு.வே.மாணிக்கவேலு, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், துணைத் தலைவா் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் தி.ராஜா, புவனேஸ்வரி காளிதாஸ், என். திருஞானம் மற்றும் உறுப்பினா்கள் சுவா்ஓவியத்தைத் திறந்துவைத்து வாழ்த்திப்பேசினா். மாணவிகளுக்கு சுவா் ஓவியம் விளக்கும் கருத்துகள் மற்றும் பெண் கல்வியின் அவசியம் குறித்த இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவா் ஓவியம் வடிவமைத்துத் தந்த கொடையாளா்கள் மணிரத்னம் திருஞானம் மற்றும் பிரபு ஆகியோா் ஏற்புரை வழங்கினா். பள்ளியின் தமிழாசிரியை கவிதா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT