புதுக்கோட்டை

பெட்ரோல் நிலையத்தில்ரூ. 7 ஆயிரம் கொள்ளை

20th Sep 2022 01:47 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே கத்தியைக் காட்டி பெட்ரோல் நிலையத்தில் ஊழியா்களைத் தாக்கி ரொக்கம், கைப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை அருகே உள்ள மேலசின்ன பழனிபட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் பாக்யராஜ் (25). இவா், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருடன் சபரி என்பவா் பெட்ரோல் போடும் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்கள் 2 போ் பெட்ரோல் போடும்படி கூறினா். தொடா்ந்து, அவா்களிடம் பணத்தைக் கேட்டபோது மோட்டாா் சைக்கிளில் வந்தவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி பாக்யராஜ் வைத்திருந்த ரூ. 7 ஆயிரத்து 11 மற்றும் 2 கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடினா். விராலிமலை காவல் நிலையத்தில் பாக்யராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT