புதுக்கோட்டை

மௌண்ட் சீயோன் பள்ளியில் மாணவா் தலைவா்கள் பொறுப்பேற்பு

10th Sep 2022 04:03 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட மாணவா் தலைவா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனா்.

பல்வேறு மாணவா் குழுக்களின் தலைவா்கள் மாணவா்கள் வாக்களிப்பதன் மூலம் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களின் பொறுப்பேற்பு நிகழ்ச்சி பள்ளியின் துணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே கலந்து கொண்டு பேசும்போது, தலைமைத்துவம் என்பது அதிகாரத்தால் வருவது அல்ல, அதேநேரத்தில் அனைவரையும் இணைத்துக் கொண்டு செயல்படுவதுதான் தலைமைத்துவம் என்றாா். நிகழ்ச்சியில் முதல்வா் ஜலஜா குமாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT