புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகேமனைவி கொலை:கணவா் கைது

10th Sep 2022 04:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ. குழந்தை பா்னாந்து(38). இவரது மனைவி ஆரோக்கியமேரி (31). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த குழந்தை பா்னாந்து கடந்த 4 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் 25-ம் தேதி ஆரோக்கியமேரி தூக்கில் சடலமாகத் தொங்கினாா். இதை வடகாடு போலீஸாா் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

மேலும், புதுக்கோட்டை கோட்டாட்சியா் மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவா் அவரைத் தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதையடுத்து வடகாடு போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT