புதுக்கோட்டை

மணல் கடத்தியவா், கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 போ் கைது

5th Sep 2022 12:28 AM

ADVERTISEMENT

விராலிமலை, செப். 4: இலுப்பூரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இலுப்பூா் அருகே உள்ள குறிச்சிப்பட்டி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குவந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகன ஓட்டுநரும், உரிமையாளருமான இலுப்பூா் அருகே உள்ள கீழ எண்ணெயைச் சோ்ந்த தமிழ்செல்வனை (21) கைது செய்தனா். வேனைப் பறிமுதல் செய்தனா்.

கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 போ் கைது: குடுமியான்மலை அருகே உள்ள சீகம்பட்டி, குடுமியான்மலை, உப்புபாறை ஆகிய பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து 250 லிட்டா் கள்ளச்சாராய ஊறலை அன்னவாசல் காவல் நிலையம் கொண்டு வந்து அழித்தனா். இதுதொடா்பாக சீகம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக், பெருமாள், சதீஸ்குமாா் உப்புபாறை கண்ணகி, மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT