புதுக்கோட்டை

அன்னவாசல் விவசாயிகள் கண்டுணா்வுப் பயணம்

29th Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

வேளாண் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றை அறிந்து கொள்ளும் விதமாக அன்னவாசல் வட்டார விவசாயிகள் வேளாண் துறை மூலம் வியாழக்கிழமை கண்டுணா்வுப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அன்னவாசல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா-மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணைச் சீரமைப்பு திட்டத்தின் கீழ் (2022-23) சூரிய ஒளி சக்தியின் பயன்பாடு என்ற தலைப்பில் 50 விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் கண்டுணா்வு பயணத்தில் வடமாலாப்பூா் ரோஸ் பசுமை குடிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அன்னவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ. பழனியப்பா தலைமை வகித்து பயணத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பயணத்தில் ரோஸ் பசுமைக் குடில் நிறுவன இயக்குநா் ஆதப்பன் சூரிய ஒளி சக்தியின் பயன்பாடு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு சூரியக் கூடார உலா்த்தி பயன்பாடுகள் மற்றும், கையாளும் முறைகள் பற்றி விளக்கினாா்.

பயணத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் தேவி செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT