புதுக்கோட்டை

மாணவா் சங்கத்தினா் போராட்டம்

19th Oct 2022 12:47 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பத் தராததைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்கிழமை வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடுதலாக கட்டணம் வசூலித்தது தொடா்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது, விரைவில் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், நீண்ட காலமாகியும் பணம் திரும்பத் தரப்படாததால் திங்கள்கிழமை மாணவிகள் மீண்டும் வகுப்பைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் நகரத் தலைவா் எஸ். மகாலெட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சா. ஜனாா்த்தனன், துணைத் தலைவா்கள் காா்த்திகா தேவி, வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மீண்டும் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வரும் நவ. 30ஆம் தேதிக்குள் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT