புதுக்கோட்டை

எம்எல்ஏக்களின் கோரிக்கைகள்: ஆட்சியா் ஆலோசனை

19th Oct 2022 12:52 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட எம்எல்ஏக்கள் வழங்கிய கோரிக்கைகள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இக்கூட்டத்தில் அவா் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்த பணிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகள், பணிகளுக்கான தோராய மதிப்பீட்டுத் தொகை மற்றும் வளா்ச்சிக் குறியீடுகள், பயன்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு அவற்றை அரசுக்கு முழுமையான அறிக்கையாக அனுபபி வைக்க வேண்டும் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT