புதுக்கோட்டை

கொன்னையூா் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவ விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆம் ஆண்டு நவராத்திரி விழா செப். 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவில், தினந்தோறும் அம்மன் ராஜராஜேஸ்வரி, மீனாட்சி, சிவலிங்க பூஜை, ஆண்டாள், அன்னபூரணி, சந்தானலெட்சுமி, கஜலெட்சுமி, மஹிஷா சுரமா்த்தினி, சரஸ்வதி என பல்வேறு அலங்காரங்களில் பக்தா்களுக்கு காட்சி தந்தாா். புதன்கிழமை விஜயதசமி அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை ஊஞ்சல் உத்ஸவ விழா நடைபெற்றது. விழாவில் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்பாள் எழுந்தருளி காட்சியளித்தாா். விழாவையொட்டி நாகசுர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் த.ஜெயலலிதா மற்றும் கோயில் பூசாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT