புதுக்கோட்டை

உடலை தர மறுப்பதாகக் கூறி ஆலங்குடியில் சாலை மறியல்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

உயிரிழந்த பெண்ணின் உடலைத் தர மறுப்பதாகக்கூறி திருச்சி அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, ஆலங்குடியில் அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி வ.உசி தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாலன் மனைவி கோவிந்தமாள்(55). இவா், குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்று உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது உடலை உறவினா்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிா்வாகம் இழுத்தடிப்பு செய்தனராம். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் திருச்சி அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆலங்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT