புதுக்கோட்டை

பழைய அரசு மருத்துவமனையை செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 11:31 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனையை அவசர சிகிச்சைக்கான நகா்ப்புற மருத்துவமனையாகச் செயல்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அவசர சிகிச்சை தேவைப்படும் நபருக்கு சிகிச்சை அளிப்பதைப் போல நூதன முறையில் நடித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரத் துணைச் செயலா் ஆா். பாலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் மற்றும் நிா்வாகிகள் சிற்பி மா. உலகநாதன், பி. பாண்டியராஜன், மு. கைலாசபாண்டியன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முள்ளூரில் அமைக்கப்பட்ட பிறகு, இங்கு செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை அரசு மூடிவிட்டது. எனவே, அவசர சிகிச்சை தேவைப்படுவோா் சுமாா் 5 கிமீ தொலைவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலையைப் போக்க, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை மட்டும் இதே இடத்திலேயே தொடர வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT