புதுக்கோட்டை

பேத்தி, மகள் காணவில்லை எனப் புகாா்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அன்னவாசல் அருகே 3 வயது பேத்தியுடன் வீட்டை விட்டுச்சென்ற தனது மகளைக் காணவில்லை என வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலையைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மனைவி புவனேஸ்வரி (23). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளாா். கருத்து வேறுபாட்டால் சத்தியமங்கலத்தில் இருக்கும் கணவா் வீட்டை விட்டு வெளியேறிய அவா், தனது தந்தை வீடு உள்ள மருதாந்தலையில் அண்மைக்காலமாக வசித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் இருந்த புவனேஸ்வரி மற்றும் 3 வயது பேத்தி ஆகிய 2 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டுச்சென்றவா்கள் பின்னா் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரன் அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT