புதுக்கோட்டை

ஆலவயல் அருகே கபடிப் போட்டி

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பெரிய ஊருணியில் கபடிப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரிய ஊருணி விநாயகா் கோயில் திடலில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு கபடிப் போட்டியை ஊா் முக்கியஸ்தா் பெரி. அழகப்பன் தலைமைவகித்து தொடக்கிவைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 50 அணி வீரா்கள் கலந்து கொண்டனா். இதில், முதல் பரிசை கரூா் அணியும், இரண்டாம் பரிசை அம்மிச்சிப்பட்டி அணியும், 3 ஆம் பரிசை இலுப்பூா் அணியும், 4 ஆவது பரிசை செண்பகப்பேட்டை அணியும் பெற்றனா். வெற்றிபெற்ற அணியினருக்கு ஒன்றியக்குழு தலைவா் சுதாஅடைக்கலமணி, துணைத் தலைவா் தனலெட்சுமிஅழகப்பன், ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல், தீயணைப்புத் துறை சதீஷ் பாண்டியன் ஆகியோா் பரிசு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT