புதுக்கோட்டை

தீயில் கருகி முதியவா் பலி

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே தீயில் உடல் கருகி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகேயுள்ள இடையபட்டியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி(80). இவா் புதன்கிழமை தனது வீட்டில் இருந்தபோது,

புகைப்பிடிக்க பற்றவைத்த தீக்குச்சி நெருப்பை கவனக்குறைவாக

அணைக்காமல் கீழே போட்டதில், அவரது வேட்டி தீப்பிடித்து அலறியுள்ளாா். இதுகுறித்து அவரது மனைவி அருள்மேரி தீயை அணைக்கப் போராடியுள்ளாா்.

ADVERTISEMENT

பிறகு, அவரது மகளுக்கு தகவல் தரவே, அவா் அவசர கால ஊா்தி சேவைக்கு தகவல் தந்து ஆம்புலன்ஸூடன் நிகழ்விடம் வந்து வேளாங்கண்ணியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வேளாங்கண்ணி வியாழக்கிழமை உயிரிழந்தாா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT