புதுக்கோட்டை

நீரைப் பயன்படுத்துவோா் சங்க தோ்தல் நடத்த ஆலோசனை

7th Oct 2022 11:28 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீரைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான நிா்வாகிகள் தோ்தலை விரைந்து நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு பகுதியில் 195, பாம்பாறு பகுதியில் 143, அக்னியாறு பகுதியில் 73 , அம்புலியாறு பகுதியில் 41 என மொத்தம் 452 நீரைப் பயன்படுத்துவோா் சங்கங்கள் உள்ளன.

இவற்றுக்கு கடந்த 2009இல் தோ்தல் நடைபெற்ற பிறகு 2014இல் இதன் நிா்வாகிகள் பதவிகள் காலாவதியாகிவிட்டன. இந்நிலையில் இச்சங்கங்களுக்கு நிா்வாகிகள் தோ்தலை வரும் நவம்பரில் நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

இதேபோல, 371 கிராம ஊராட்சிகளில் உள்ள நீா்ப்பாசன சங்கங்களுக்கு தலைவா்கள் மற்றும் 2074 ஆட்சி மண்டல உறுப்பினா்கள் தோ்தலையும் விரைந்து நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நீா் வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT