புதுக்கோட்டை

சூதாடிய 10 போ் கைது

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கறம்பக்குடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வாணிபத்தெரு முக்கம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்தவா்கள் எஸ். பீா் முகமது (31), ச.ராஜ் கபூா் (28), எம். சையது (40), எஸ். முகமது அபுபக்கா் (39), எம். முகமது அப்துல்லா (52), பி. முகமது காசீம் (62), எம். ஹாசன் முகமது (36), இ.இம்தாதுல்லா (38), எஸ். சகுபா் சாதிக் (36), எம்.யா்சத் (30) ஆகிய 10 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT