புதுக்கோட்டை

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

7th Oct 2022 11:31 PM

ADVERTISEMENT

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் அக். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்கெனவே செப். 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT