புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அன்னவாசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரூ. 33, 500 ரொக்கம் ஆகியவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அம்சவள்ளி(57). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, ரூ.33 ஆயிரத்து 500 ரொக்கம், மேலும் சான்றிதழ்கள் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT