புதுக்கோட்டை

பாலத்தின் மீது காா் மோதி தாய், தந்தை உயிரிழப்பு;மகன், இளம்பெண் காயம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா் விபத்தில் பெற்றோா் உயிரிழந்தனா். காரை ஓட்டி வந்த அவா்களது மகனும், இளம்பெண்ணும் பலத்த காயமடைந்தனா்.

சென்னை அடையாறு காந்தி நகரில் வசிப்பவா் பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த பிஸ்வா ராஜன் (38), வங்கி அதிகாரி. இவா், தனது தந்தை பிஜய்குமாா்(75), தாய் மீரா சரண்(75) மற்றும் உடன் பணியாற்றும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த அஞ்சனா (32) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை காரில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலூா் பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பாலத்தின் மீது மோதியதில் மீரா சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்து காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

விபத்துகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் வந்த விராலிமலை போலீஸாா்

காரில் சிக்கியிருந்த பிஜய்குமாா், பிஸ்வா ராஜன், அஞ்சனா ஆகிய 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கும், மீரா சரண் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

காயமடைந்தவா்களில் பிஜய்குமாா் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தாா். விபத்து குறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT