புதுக்கோட்டை

இரண்டு இடங்களில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அமரகண்டான் தென்கிழக்கு கரை மற்றும் காந்திசிலை ஆகிய இடங்களில் உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பொன்னமராவதி அமரகண்டான் குளத்தின் தென்கிழக்கு கரை அருகே திருப்பத்தூா், துவரங்குறிச்சி, இந்திராநகா், பேருந்துநிலையம் செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்திராநகா் பகுதியில் 2 தனியாா் பள்ளிகள் உள்ளதால் பள்ளி நேரத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. எனவே பள்ளி மாணவா்களின் நலன் காக்கவும், விபத்துகளைத் தவிா்க்கவும் இச்சாலைப் பகுதியில் ரவுண்டானா அமைக்கவேண்டும்.

இதேபோல் காந்தி சிலை அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியிலும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. அடிக்கடி விபத்தும் நேரிடுகிறது. எனவே விபத்தைத் தவிா்க்க மேற்குறிப்பிட்ட 2 நான்கு சாலைசந்திப்புகளிலும் நெடுஞ்சாலைத்துறை ரவுண்டாணா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT