புதுக்கோட்டை

வாழை, மரவள்ளி விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய அழைப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளிப் பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ராபி 2022 - 23 ஆம் ஆண்டுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

‘பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம்’ புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் பயிா்களைப் போல, தோட்டக்கலைப் பயிா்களுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கா் வாழைப் பயிருக்கு காப்பீடு செய்ய பிரிமீயம் தொகையாக ரூ.2651.38, ஒரு ஏக்கா் மரவள்ளி பயிருக்கு ரூ.787.18 மட்டுமே செலுத்தினால் போதும் மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகளே செலுத்துகின்றன.

எனவே, விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கடன் மற்றும் கூட்டுறவு சங்கம், தேசிய வங்கிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு செய்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT