புதுக்கோட்டை

லாட்டரி விற்றவா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கீழகரும்பிரான்கோட்டையைச் சோ்ந்த சி. கருணாகரன்(51) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 19 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT