புதுக்கோட்டை

அக்.11-இல் மனிதச்சங்கிலி:கட்சி நிா்வாகிகள் கூட்டம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக். 11ஆம் தேதி, 9 இடங்களில் மனிதச்சங்கிலி இயக்கத்தை நடத்துவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு, மதிமுக மாவட்டச் செயலா் மாத்தூா் கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் த. செங்கோடன், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் இப்ராஹிம் பாபு, திக மாவட்டச் செயலா் அறிவொளி, விசிக மாவட்டச் செயலா்கள்செப. பாவாணன், சசி.பா. கலைவேந்தன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவா் அஸ்ரப்அலி, மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில் துரை முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூா், அன்னவாசல், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய 9 இடங்களில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT