புதுக்கோட்டை

கற்பக விநாயகா கல்லூரியில் மொழித்திறன் பயிற்சி

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை கற்பகவிநாயகா மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ மாணவா்களுக்கு மொழித் திறன் மற்றும் மென்திறன் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்விக் குழும அறங்காவலா் கவிதா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் அனிதாராணி ஒருங்கிணைத்தாா். மொழித் திறன்பயிற்சியாளா் கிருத்திகா கலந்து கொண்டு, மொழித்திறன் கற்பதற்கு அவசியமான கேட்கும்திறன், வாசிக்கும்திறன், பேசும்திறன், எழுதும்திறன் எனபல வகை நுண்திறன்களைக்கற்கும் பயிற்சிகளைவிளக்கமாகப் பேசினாா்.

நிகழ்ச்சியை பேராசிரியா்கள் சாமிநாதன், அமிா்தா, ஜெனிபாமேரி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT