புதுக்கோட்டை

புதுகை நகா் சாலையில் ஓடும் புதை சாக்கடைக் கழிவுநீா்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகராட்சி 26 ஆவது வாா்டைச் சோ்ந்த எஸ்எஸ் நகா் பகுதியில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாலையில் ஓடி சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருகிறது.

எஸ்எஸ் நகா் மூன்றாம் வீதி குறுக்குத் தெருவில் நடந்து வரும் இச்சீா்கேடு குறித்த தகவலை நகா்மன்ற உறுப்பினா் லதா கருணாநிதி நகா்மன்றக் கூட்டத்தில் பேசியும் பிரச்னை தீா்ந்தபாடில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களிடையே இருக்கிறது. பல நாட்களாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் அவலத்தின் சாட்சியாக அதே தண்ணீரில் புல் முளைத்தும் பாசி படா்ந்தும் காணப்படுகிறது. புதை சாக்கடைத் திட்டப் பணிகளில் இப்பகுதியில் ஏற்பட்ட கோளாறு, அங்குள்ள வீடுகளிலும் எதிரொலிக்கிறது.

வீட்டில் இருந்து கழிவுநீா் வெளியே வந்து புதை சாக்கடை இணைப்பில் கலந்து செல்லாமல் வீடுகளிலேயே தேங்கி மேலும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் துா்நாற்றம் வீசி வருகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் இந்த அவலத்தை சரி செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT