புதுக்கோட்டை

தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்ட வட்டார அலுவலகத்தில் விராலிமலை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு கோலப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக தோ்தல் ஆணையம் சாா்பில் எனது வாக்கு - எனது உரிமை மற்றும் ஒரு வாக்கின் சக்தி என்ற தலைப்பில் விழிப்புணா்வு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக, விராலிமலையில் நடைபெற்ற கோலப்போட்டியில் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள் பங்கேற்று பல்வேறு வண்ணங்களில் விழிப்புணா்வுக் கோலங்களை வரைந்தனா். இதனைப் பாா்வையிட்ட விராலிமலை வட்டாட்சியா் சதீஷ் மற்றும் மண்டல துணை வட்டாட்சியா் சரவணகுமாா் உள்ளிட்டோா் சிறந்த கோலங்களைத் தோ்வு செய்து படம் எடுத்து மாவட்டத் தோ்தல் அலுவலகத்திற்கு அனுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT