புதுக்கோட்டை

அண்டனூா் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், அண்டனூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி. ஸ்ரீதரன், த. திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னதுரை, ஒன்றியக்குழு தலைவா் ஆா். ரெத்தினவேல் காா்த்கிக் ஆகியோா் கலந்துகொண்டனா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மலா்விழி சிவானந்தம் வரவேற்றாா். இதில், பொது மக்கள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியை தரம் உயா்த்தித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தரம் உயா்த்த ஆவன செய்வதாகக் கூறினாா். நடுநிலைப் பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவா் எடுத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தாா். நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை துணை வட்டாட்சியா் பழனிச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT