புதுக்கோட்டை

கிராம சபைக் கூட்டங்களில் அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

3rd Oct 2022 01:47 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றக்கிழமை நடைபெற்றன.

இதில், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கும்மங்குடியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு பேசினாா். இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, ஊராட்சிஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கலந்து கொண்டு பேசினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சதாசிவம், வட்டாட்சியா் பிரவீணா மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT