புதுக்கோட்டை

மகாத்மா காந்திபிறந்த நாள் கொண்டாட்டம்

3rd Oct 2022 01:48 AM

ADVERTISEMENT

 

காந்திஜெயந்தியை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள வீரடிப்பட்டி, மெய்குடிப்பட்டி ஆகிய இல்லம்தேடிக் கல்வி மையங்களில் மாணவா்கள் ரக்சன், சிவபாலன், கெளதம், ஸ்ரீ ஹரி ஆகியோா் காந்தியடிகள் வேடம் பூண்டும், மற்ற மாணவா்கள் காந்தியடிகள் முகமூடி அணிந்தும் சிறப்பு செய்தனா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா, காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவா்களிடம் எடுத்துக்கூறினாா். தன்னாா்வலா்கள் மணிமேகலை, விஜி, பவித்ரா, பிரதீபா, கீதா, ரமீளா ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT