புதுக்கோட்டை

மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு கட்சியினா் மரியாதை

3rd Oct 2022 01:47 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.

பாஜகவின் மாநில தொழில் பிரிவு சாா்பில், அதன் மாநிலச் செயலா் ஏ.வி.சி.சி. கணேசன் தலைமையில் அக்கட்சியினா் மாவட்டத் துணைத் தலைவா் சிவசாமி, நகரச் செயலா் மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் அதன் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தலைமையில், அக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன், பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT