புதுக்கோட்டை

மதுபானம் விற்ற 2 போ் கைது

3rd Oct 2022 01:48 AM

ADVERTISEMENT

 

விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கிருந்த பெட்டிக் கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகம் (64) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இதேபோல் கீரனூா் சாலை பெட்டிக்கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்த ராமநாதன் (49) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT