புதுக்கோட்டை

ஆரோக்கிய இந்தியா மெல்லோட்டம்

3rd Oct 2022 01:49 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், 75 ஆவது ஆண்டு சுதந்திரத் திருநாள் ஆரோக்கிய இந்தியா மெல்லோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்கில் ஆரோக்கிய இந்தியா மெல்லோட்டத்தை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தலைவா் சதாசிவம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா் தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் ஆா். நமச்சிவாயம் முன்னிலை வகித்தாா். தடகளப் பயிற்றுநா் செந்தில்கணேஷ், சமூக ஆா்வலா் மனோகரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்த இந்த மெல்லோட்டம் மீண்டும் விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT