புதுக்கோட்டை

அரசு இசைப் பள்ளியில் விஜயதசமியன்று மாணவா் சோ்க்கை

2nd Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை நரிமேடு, லட்சுமிநகரில் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் வரும் அக். 5ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ.மா. சிவஞானவதி கூறியது:

புதிய கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில், குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம் (பாட்டு), பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றுக்கு தனித்தனி அறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

வரும் அக். 5ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு இந்த வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. 13 முதல் 25 வயதுக்குள்பட்ட இரு பாலரும் இவற்றில் சேரலாம்.

3 ஆண்டுகள் படிப்பு முடிந்ததும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். படிக்கும்போது மாதம் ரூ. 400 வீதம் அரசு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும். அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும். இசைப் பள்ளியில் படித்தோருக்கே அரசுத் திருக்கோவில்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆா்வமுள்ளோா் மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 94861 52007 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT