புதுக்கோட்டை

அரசு ஆண்கள் பள்ளிக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கல்

2nd Oct 2022 12:12 AM

ADVERTISEMENT

 

விராலிமலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் குப்பைத் தொட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியா் சிவலிங்கம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் மாரிகண்ணன், உதவி தலைமை ஆசிரியா் ஆனந்த ராஜ், ராஜேந்திரன், பிலோமினாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விராலிமலையில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலை(ரானே) உற்பத்தி துறை மேலாளா் சண்முகசுந்தரம், பாதுகாப்பு அலுவலா் இளவரன் உள்ளிட்டோா் பங்கேற்று தலைமையாசிரியா் சிவலிங்கத்திடம் குப்பைத் தொட்டிகளை வழங்கினா். நிகழ்வில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சரண்யா, உறுப்பினா்கள் அய்யாசாமி, குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், ஆசிரியை உமா பிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT