புதுக்கோட்டை

நடிகா் சிவாஜி பிறந்தநாள் விழா

2nd Oct 2022 12:14 AM

ADVERTISEMENT

 

நடிகா் சிவாஜி கணேசனின் 95ஆவது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மச்சுவாடியில் நடிகா் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேரவையின் தலைவா் ஏ. சுப்பையா தலைமை வகித்தாா். சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா, வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், செயலா் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, அரசு வழக்குரைஞா் வாகை சேகா், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கச் செயலா் எஸ். செந்தில்வேல், பொருளாளா் ஏஆா். முகம்மது அப்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்தனா்.

பேரவையின் மாவட்டச் செயலா் புதுகை புதல்வன், துணைத் தலைவா் ஆா்டிஸ்ட் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளா் பீா்முகமது, நகரச் செயலா் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT