புதுக்கோட்டை

21 வயதுக்குள்பட்டோருக்கு மது விற்பனை கூடாது

1st Oct 2022 04:44 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 வயதுக்குள்பட்ட யாருக்கும் மது விற்பனை நடைபெறவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளாா்.

இதற்காக மதுக் கடைகளுக்கு அவ்வப்போது காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டு இதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், கலால் உதவி ஆணையா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோா் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT