புதுக்கோட்டை

துவாா் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டம்

1st Oct 2022 04:44 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், துவாா் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித் தலைவா் புஷ்பலதா செந்தில் தலைமை வகித்தாா். மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி துணைத் தலைவா் அமுதாரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் (பொ) காளிமுத்து வரவேற்றாா்.

விழாவில் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், ஊராட்சியில் நெகிழி பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்தல், துணிப்பையைப் பயன்படுத்த வலியுறுத்தல், , கிராம மக்கள் அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்துவது, கிராமந்தோறும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு பசுமையான கிராமமாய் மாற்றுவது, மரங்களை வளா்த்து தூய்மை காற்றை சுவாசிப்பது என கிராம பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினா்கள், அலுவலா்கள் உறுதியேற்று, பேரணியாக ஊராட்சி முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி, ஊராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT