புதுக்கோட்டை

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

1st Oct 2022 04:43 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2015-இல் ஆலங்குடி அருகேயுள்ள கே. ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் அ. மத்தியாஸ் வீட்டின் கதவை உடைத்த புதுக்கோட்டை அருகேயுள்ள திருக்கட்டளையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (35) திருட முயன்றாா்.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் செல்வத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனை, 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயபாரதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT