புதுக்கோட்டை

குளவாய்ப்பட்டியில் காய்ச்சல் சிறப்பு முகாம்

1st Oct 2022 04:44 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் எஸ். குளவாய்ப்பட்டி கிராம சபை அரங்கில் இலவச காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பாரதிராஜா தலைமை வகித்தாா். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என டாக்டா்கள் அறிவுறுத்தினா். ஏராளமான பொதுமக்களுக்கு இலவசப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, மருந்துகளும், ஆலோசனைகளும் இலவசமாக அளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொதுமேலாளா் ஜோசப், காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பாண்டிராஜ் ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT